உலகில் அமைதியை நிலவ செய்வதில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் சின்சோ அபே ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா நாடுகளின் முதல் எழுத்துகளை சேர்த்தால் வரும் ஜெய் என்னும் வார்த்தைக்கு வெற்றி என அர்த்தம் என்றார். இதனிடையே மூன்று நாடுகளின் உறவும் வலிமையாக இருப்பதாக கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்காவிடம் இருந்து இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அதிகளவில் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதை சுட்டிக் காட்டினார். இதேபோல் இந்த சந்திப்பு மூன்று நாடுகளின் உறவையும் மேலும் வலுப்படுத்தும் என தான் நம்புவதாக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார்.