அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஈரான் அதிபர் ஹசன் ரவுகானியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஐக்கிய நாடு சபை கூட்டத்திற்கு இடையே உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து முக்கிய ஆலோசனைகளை நடத்தினார்.
இதன் ஒரு பகுதியாக ஈரான் அதிபர் ஹசன் ரவுகானியை மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். சந்திப்பின் போது, இரு நாடுகளின் நல்லுறவு குறித்தும், பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடும் மோதல் போக்கு உள்ள நிலையில், பிரதமர் மோடியின் ஈரானுடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் ஐ.நா-வில் இன்று உரையாற்றும் மோடி, அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இரவு 9 மணியளவில் நாடு திரும்புகிறார்.