பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை குழு கூட்டம் கூடுகிறது

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆலோசிக்க டெல்லியில் பாதுகாப்பு அமைச்சரவை குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதற்கு குடியரசுத்தலைவர்,பிரதமர் உள்ளிட்ட அனைவரும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்தநிலையில் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் இன்று காலை கூடுகிறது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் பாதுகாப்புத்துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தாக்குதல் நடைபெற்ற இடத்துக்கு செல்லும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காயமடைந்த வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறவும் திட்டமிட்டுள்ளார்.

Exit mobile version