உலக வர்த்தக கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

குஜராத் மாநிலத்தில் நடைபெறும் உலக வர்த்தக கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி, தன் சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றுள்ளார். டெல்லியிலிருந்து அகமதாபாத்துக்கு விமானம் மூலம் சென்ற அவர், அங்கிருந்து காந்திநகர் சென்று உலக வர்த்தக கண்காட்சியைத் துவங்கி வைத்தார். இதையடுத்து, பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுக்கிறார்.

Exit mobile version