பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனை மேம்படுத்தும் வகையிலான “ஹெல்த் ஆஃப் டுமாரோ” (HEALTH OF TOMORROW) என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். டெல்லியில் நடைபெற்ற 4வது சர்வதேச நட்பு நாடுகள் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, சர்வதேச அளவில் தாய்மார்கள் நலன் மற்றும் குழந்தைகள் நலனை பேணி பாதுகாக்கும் வகையிலான “ஹெல்த் ஆஃப் டுமாரோ” என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், 85 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தாய்மார்கள் நலனை பாதுகாக்கும் விதமாக “ஹெல்த் ஆப் டுமாரோ” என்ற இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், தாய்மார்கள் மற்றும் பெண்கள் நலனை பாதுகாப்பதன் மூலமே நாளைய சமுதாயத்தை நாம் பாதுகாக்க முடியும் எனவும் கூறினார்.