பிரதமர் மோடி நேர்மையாக சேவை செய்துவருகிறார்: பாஜக தலைவர் அமித்ஷா

பிரதமர் மோடி நேர்மையுடன் சேவை செய்வதாகவும் தேவையான நேரங்களில் மதி நுட்பமான முடிவுகளை எடுத்துள்ளதாகவும் பாஜக தலைவர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்

பீகார் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்ட அமித் ஷா, காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு பீகாரின் வளர்ச்சிக்கு ஒரு லட்சத்து 93 ஆயிரம் கோடி ரூபாயை மட்டுமே செலவிட்டுள்ளதாகவும் மோடி தலைமையிலான அரசு 6 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். மோடி இதுவரை விடுமுறையே எடுத்ததில்லை என்று பாராட்டிய அமித்ஷா, ஆனால், ராகுல் காந்தி 3 மாதங்களுக்கு ஒருமுறை விடுப்பில் சென்று விடுவதாக அவர் விமர்சித்தார். 70 ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்த ஆட்சியை மோடி வழங்கி வருவதாக அமித் ஷா கூறினார்.

Exit mobile version