முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது, இந்தியாவில் தொழில் துவங்க வாய்ப்புகள் உருவாகி உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத் மாநிலம், காந்தி நகரில், 9-வது வைப்ரண்ட் குஜராத் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், உலக வங்கியின் எளிதாக தொழில் துவங்க வாய்ப்புள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 65வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக தெரிவித்தார்.
முதல் 50 இடங்களுக்குள் வரும் வகையில் கடுமையாக உழைக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளவற்றை அகற்றுவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.