பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் தீவிரவாத தாக்குதல்கள் குறைந்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 7ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பில்வாராவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 10 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் மும்பை தாக்குதல் நிகழ்ந்தபோது, மத்திய அரசை ரிமோட் மூலம் சோனியா காந்தி கட்டுப்படுத்திக் கொண்டிருந்ததாக கூறினார். சர்ஜிக்கல் Strike நடத்தியதற்கு பழமைவாய்ந்த கட்சியான காங்கிரஸ் வீடியோ ஆதாரம் கேட்பதாக கூறிய அவர், எல்லை தாண்டி தாக்குதல் நடத்த செல்லும் வீரர்கள் கேமராக்களை சுமந்துக்கொண்டா செல்வார்கள் என்று கேள்வி எழுப்பினார். மேலும் மக்களின் பிரச்சனை குறித்து கவலைப்படாத காங்கிரஸ், தனது சாதி மற்றும் தந்தையை பற்றி தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.