நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய குடியிருப்புகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

டெல்லி நார்த் அவென்யூ பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 36 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர் ஹெர்தீப் சிங் பூரி, மத்திய அமைச்சர்கள் ராம்விலாஸ் பஸ்வான், ஹர்ஷவர்தன் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த குடியிருப்பு வீடுகள் அனைத்தும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டு விரைவில் வழங்கப்பட உள்ளது.

Exit mobile version