வாக்காளர்களின் நம்பிக்கையை பிரதமர் மோடி இழந்துவிட்டதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய மன்மோகன் சிங், 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி ஆட்சிக்கு வரும்போது, மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை அளித்தாகவும், ஆனால் அதையெல்லாம் நிறைவேற்றாமல் வாக்காளர்களின் நம்பிக்கையை சிதைத்துவிட்டதாக கூறினார். அதனால் பிரதமர் மோடி, வாக்காளர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டர் என்று தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில், பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் சூழல், சி.பி.ஐ அமைப்பு போல் அதன் தரத்தை இழந்துவிட்டதாக விமர்சித்துள்ளார் முன்னள் பிரதமர் மன்மோகன் சிங். அதோடு, நாட்டில் நடக்கும் சாதி வன்முறைகளையும், கொலைகளையும் பார்த்துக்கொண்டு, பிரதமர் மோடி அமைதியாக இருப்பதாகவும் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.