ஆசியான் மாநாட்டில் பங்கேற்க தாய்லாந்து புறப்பட்டார் பிரதமர் மோடி

இந்தியா- ஆசியார் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தாய்லாந்து புறப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்தில் நடைபெறும் இந்தியா- ஆசியார் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதேபோன்று 14வது கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டிலும் அவர் கலந்துகொள்கிறார். இதையொட்டி 3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் பாங்காக் புறப்பட்டு சென்றார்.

பாங்காக் தேசிய உள்விளையாட்டு அரங்கில் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றுகிறார். மேலும் குருநானக்கின் 550வது பிறந்தநாள் நினைவாக சிறப்பு நாணயம் ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார். அத்துடன் “தாய்” மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும் அவர் வெளியிடுகிறார்.

இந்தியா- ஆசியான் உச்சிமாநாட்டில் பிராந்திய விரிவான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பாக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஆசியன் அமைப்பைச் சேர்ந்த புரூனே, கம்போடியா, இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட 10 நாடுகள் மற்றும் அவற்றின் பொருளாதார கூட்டாளிகளாக திகழும் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகள் இடையே நடைபெறும் பிராந்திய அளவிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தாய்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 4ம் தேதி பிரதமர் மோடி இந்தியா திரும்புவார் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version