ஆவடியில் தயாரிக்கப்பட்ட பீரங்கியை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி!

ஆவடி ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட போர் பீரங்கியை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

சென்னை ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தில் இருந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். அங்கு ராணுவத்தின் சார்பாக அளிக்கப்பட்ட மரியாதையை பிரதமர் ஏற்றுக்கொண்டார். பின்னர் சென்னை ஆவடி ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட, அர்ஜுன் எம்.பி.டி. MK-1A ரக கவச வாகனத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

 

அதைத் தொடர்ந்து, நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வந்த பிரதமரை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை தலைவர் தனபால், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், நிகழ்ச்சி மேடைக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து முதலமைச்சர், துனை முதலமைச்சர், அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசினை வழங்கினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் ஆகியோரும் பிரதமர் மோடிக்கு பொன்னாடை வழங்கி வரவேற்றனர்.

 

 

Exit mobile version