நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி டுவீட்டரில் குடியரசு தின வாழ்த்து

குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் வண்ணமிகு விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். 70வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்கிறார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 70-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அனைத்து இந்தியர்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

Exit mobile version