இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

நாட்டின் எல்லை பகுதியை கண்காணிக்க உதவும் செயற்கைக்கோள் மற்றும் தமிழக மாணவர்கள் தயாரித்த கலாம் சாட்டிலைட் ஆகியவை வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து   இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, நேற்றிரவு 11.37 மணியளவில் ராக்கெட் ஏவப்பட்டது. மைக்ரோசாட் ஆர் மற்றும் கலாம் சாட் என்ற இரண்டு செயற்கைக்கோள்களை சுமந்தபடி, பிஎஸ்எல்வி சி44 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

690 கிலோ எடையில் உருவாக்கப்பட்ட மைக்ரோசாட் ஆர் செயற்கைக்கோள், நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வு பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. தமிழக மாணவர்கள் உருவாக்கிய கலாம் சாட் செயற்கைக்கோள் 1.2 கிலோ கிராம் எடை மட்டுமே கொண்ட நானோ வகையை சேர்ந்தது. இதன் ஆயுட்காலம் இரண்டு மாதங்கள் ஆகும்.செயற்கைக்கோள்களின் சுற்று வட்டப்பாதையை அதிகரிக்க பரிசோதனை முறையில், கலாம் சாட் செயற்கை கோள் பிஎஸ்எல்வி டிஎல் தொழில்நுட்ப உதவியுடன் செலுத்தப்பட்டது. முதல் முறையாக ராக்கெட்டின் 4வது நிலையில் இந்த செயற்கைக் கோள் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version