அதிரடிப்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், தாக்குதலில் பலியான வீரர்களுக்கு வீர வணக்கத்தை தெரிவித்து கொள்வதாகவும் அவர்களது தியாகம் எப்போதும் மறையாது என்றும் குறிப்பிட்டுள்ளார். தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தாருக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துள்ள மோடி, இத்தகைய வன்முறை செயலுக்கு காரணமானவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
Discussion about this post