பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின் பிங்-ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்காக கிர்கிஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங்,மற்றும் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார்

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் நகரில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து விமானம் மூலம் பிஷ்கெக் நகருக்கு பிரதமர் மோடி சென்றார்.

மாநாட்டின் இடையில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக சீன அதிபரின் பிறந்தநாளையொட்டி அவருக்கு கைகுலுக்கி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்தியாவில் நடைபெற இருக்கும் முறை சாரா உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையு2ம் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இது தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் விதமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.மேலும் உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் அமையவுள்ள துப்பாக்கித் தொழிற்சாலைக்கு ரஷ்யா உதவ முன்வந்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரசியாவின் விளாடிவோஸ்டக் நகரில் நடைபெற உள்ள கிழக்கு பொருளாதார பேரவை மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பின்னர் ஷாங்காய் ஒத்துழப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உலக நாடுகளின் தலைவர்களுக்கு கிர்கிஸ்தான் அதிபர் ஜூன்பேக்காப் விருந்துஅளித்தார்

Exit mobile version