பிரதமர் மோடியிடம் அவரது குறைகளையே சுட்டிக்காட்டமுடியாது: ராகுல் காந்தி விமர்சனம்

பிரதமர் நரேந்திர மோடியிடம், அவரது குறைகளையே சுட்டிக்காட்ட முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து பேசினார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், ஒடிசாமொழியின் உரையாடல் நிகழ்வில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பணியானது பரிணாமம் மிக்கது என்றும், இதன்மூலம் மக்களின் பிரச்னைகளை உற்றுநோக்க முடிவதாகவும் தெரிவித்தார். மேலும் நரேந்திர மோடியிடம் அவரது குறைகளையே சுட்டிக்காட்டமுடியாது என்றும், ஆனால் காங்கிரஸ் கட்சியினர் அவ்வாறு அல்ல என்றும் இதுவே காங்கிரஸிற்கும் பாஜகவிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்றும் தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும், பாஜகவினரும் செய்த துன்புறுத்தல்களால்தான், தான் நல்ல மனிதனாக இருப்பதாகவும் கூறினார். மோடியிடம், மக்களின் பிரச்னைகளுக்காக தொடர்ந்து சண்டையிடுவேன் என்றும், எந்தவொரு நிலையிலும் மக்களுக்காக தன் கருத்தை தெரியப்படுத்துவதில் உறுதியாக இருப்பேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

Exit mobile version