மதுரையில் பிரதமர் மோடி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்!

மதுரை பாண்டி கோயில் அருகே, அம்மா திடலில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 36 பேரை ஆதரித்து, பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். நிகழ்ச்சியில் வெற்றிவேல்… வீர வேல்… எனக் கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி, தமிழில் சில வார்த்தைகளை பேசி பொதுமக்களை உற்சாகப்படுத்தினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர், பல ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசும், அதில் அங்கம் வகித்த திமுகவும், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து சிந்திக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். உலகத்தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் மிக விரைவில் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

பல ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசாங்கத்தில், திமுக அங்கம் வகித்தது ஆனால் இரு கட்சிகளும் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து சிந்திக்கவில்லை
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திட்டமிட்டது பாஜக – அதிமுக அரசாங்கங்கள் தான் உலகத்தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் முறையாக அமைக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன் : பிரதமர் மோடி
தொடர்ந்து பேசிய பிரதமர், பெண்கள் வலிமையை வெளிப்படுத்தும் மாநிலமாக மதுரை மண் திகழ்வதாக குறிப்பிட்டார். திமுகவும், காங்கிரசும் திரும்ப திரும்ப பெண்களை அவமானப்படுத்துவதாகவும் பிரதமர் விமர்சித்தார்.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் செயல்படுகிறது.திமுக காங்கிரஸ் கட்சியினர் திரும்ப திரும்ப பெண்களை அவமானப்படுத்துகின்றனர்.
பெண்களை அவமானப்படுத்துவது திமுக காங்கிரஸ் கட்சியினரின் இயல்பு; இதில் ஆச்சரியம் இல்லை : பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்று பெருமைப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு மதுரை மக்கள் சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Exit mobile version