ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளார்.
14-வது ஜி-20 உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் நாளை தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, இந்தியா, ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இதையடுத்து டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஜப்பான் நாட்டிற்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். ஜப்பான் சென்ற பிரதமருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர், சீன அதிபர், அமெரிக்க அதிபர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். ஜி-20’ உச்சி மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.