11-வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

11-வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நவம்பர் 13-ம் தேதி பிரேசில் செல்ல உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் பங்குபெறும் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் கூடுகிறது. பல்வேறு துறைகளில் கூட்டாக பங்களிப்பு அளிக்கும் விதமாக இந்த மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும் விதமாக இந்த ஆண்டு 11வது பிரிக்ஸ் உச்சி மாநாடு வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நவம்பர் 13ம் தேதி பிரேசில் செல்ல உள்ளதாகவும், ஐந்து நாடுகளுக்கு இடையேயான கூட்டுறவை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Exit mobile version