கேலோ விளையாட்டு துவக்க விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்

ஏழைக் குடும்பம் மற்றும் சிறிய நகரங்களிலிருந்து வரும் வீரர்கள் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் கட்டாக்கில், கேலோ விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி, காணொளிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார். இந்தியாவில் உள்ள இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் கேலோ விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில், பல்கலைக் கழக அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. வரும் மார்ச் மாதம் 1ம் தேதி வரை நடைபெற இருக்கும் கேலோ விளையாட்டு போட்டியில் நாடு முழுவதும் உள்ள 159 பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 400 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.

துவக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி, பள்ளிகளுக்கான கேலோ போட்டியில், 80 சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும், அதில் 56 சாதனைகள் மாணவிகள் நிகழ்த்தியுள்ளதாகவும் பெருமிதம் தெரித்தார். கேலோ போட்டிகளை அடித்தளமாகக் கொண்டு இளம் விளையாட்டு வீரர்கள் உச்சம் அடைய வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, ஏழைக் குடும்பம் மற்றும் சிறிய நகரங்களிலிருந்து வரும் வீரர்கள் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவதாக பெருமிதம் தெரிவித்தார்.

Exit mobile version