பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சமூக நல அமைப்புகளின் உறுப்பினர்களோடு ஆலோசனை!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் மோடி பல்வேறு சமூக நல அமைப்புகளின் உறுப்பினர்களோடு ஆலோசனை நடத்தினார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு, அனைத்து வகை பொது போக்குவரத்திற்கு தடை உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் மூலம், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பிரதமர் மோடி அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு என்பது கொரோனாவால் பாதிப்படைந்த அனைத்து நாடுகளுக்குமான ரோல் மாடல் எனப்படும் முன் மாதிரி செயல், என உலக அளவில் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மதங்களிலும் உள்ள, சமூக நல அமைப்புகளின் உறுப்பினர்களோடு, காணொலி காட்சி மூலம், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ், ஆர்.எஸ்.எஸ்ஸை சேர்ந்த பையாஜி ஜோஷி, தாவூதி போரா அமைப்பின், கொய் ஜோகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

 

Exit mobile version