அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை துவக்கினார் டொனால்ட் டிரம்ப்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் துவக்கியுள்ளார்.

அமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள். இதன்படி கடந்த 2016ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு, அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். தன்னை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனை அவர் வெற்றிகொண்டார். இருவருக்கும் போட்டி பலமாக இருந்தது.

இந்நிலையில் 2வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள டிரம்ப், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்கான பிரசாரத்தை துவக்கியுள்ளார். புளோரிடா மாகாணத்தின் ஓர்லண்டோவின் அவர் தனது பிரசாரத்தை துவக்கியுள்ளார்.

Exit mobile version