இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பெயரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வித்தியாசமாக உச்சரித்ததை ஐசிசி கிண்டலடித்துள்ளது.
இந்திய வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், குஜராத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொடேரா மைதானத்தை திறந்து வைத்தார். அங்கு நடைபெற்ற நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் உரையாற்றினார்.
Sach-
Such-
Satch-
Sutch-
Sooch-Anyone know? pic.twitter.com/nkD1ynQXmF
— ICC (@ICC) February 24, 2020
ஒரு லட்சம் மக்கள் மத்தியில் பேசிய ட்ரம்ப், சச்சின் முதல் விராட் கோலி வரை சிறந்த விளையாட்டு வீரர்களை இந்தியா உருவாக்கி உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். அப்போது சச்சின் பெயரை குறிப்பிடும் போது சூச்சீன் டெண்டுல்கர் ((soo-chin tendulkar)) என்று உச்சரித்தார்.
இதற்கு சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் வலம் வந்தன. இந்த நிலையில், ஐசிசியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இனி சாதனை புத்தகத்தில் சூச்சின் என பதிவிட உள்ளதாக வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளது.