இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் டிரம்ப்

இரண்டு நாள் அரசு முறைப்பயணத்தை முடித்துக்கொண்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா புறப்பட்டார்.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் கடந்த 24 ஆம் தேதி இந்தியா வந்தனர். டொனால்ட் டிரம்ப் தனது மனைவி, மகளுடன் அகமதாபாத் மற்றும் டெல்லியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

இந்தப் பயணத்தின் இறுதியாக குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அளித்த இரவு விருந்தில் டிரம்ப்பும் அவரது மனைவியும் பங்கேற்றனர். இந்த விருந்தில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

மேலும், அசாம், ஹரியானா மாநில முதல்வர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, முப்படைத் தளபதி விபின் ராவத், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் விருந்தில் பங்கேற்றனர்.

இதையடுத்து ராம்நாத் கோவிந்த்தும், டொனால்ட் டிரம்ப்பும் 5-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலை முன்பு தம்பதிகளாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தனது 36 மணி நேர இந்தியப் பயணம் முடிவடைந்ததை அடுத்து டொனால்ட் டிரம்ப், மனைவியுடன் அமெரிக்கா தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.

Exit mobile version