பொருளாதார வீழ்ச்சியைக் காரணம் காட்டி H1B, L-1, J-1 விசாக்கள் வழங்குவதை நிறுத்தி வைப்பது குறித்து அமெரிக்க அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் அமெரிக்காவில் கோடிக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். இதனால் குடியுரிமை இல்லாத வெளிநாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு ஏப்ரல் 24ஆம் தேதி முதல் 60 நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்தத் தடையானது வரும் 22ஆம் தேதி முடிவடையும் நிலையில், அமெரிக்காவில் வெளிநாட்டவர் பணிபுரிவதற்கான H1B விசாக்கள் வழங்குவது குறித்தும், L-1, J-1 விசாக்களையும் நிறுத்தி வைக்கவும் டிரம்ப் தலைமையிலான அரசு பரிசீலித்து வருகிறது. அதே நேரத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்கள், உணவு வழங்கல் நிறுவனங்களுக்குப் பணிக்கு வருபவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.