டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடியை ஏற்றினார்

நாட்டின் 71வது குடியரசு தின விழா டெல்லி ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற கோலாகல விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து  முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

குடியரசு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு,   பிரேசில் அதிபர் ஜேர் போல்சனரோ, மத்திய அமைச்சர்கள்,  அதிகாரிகள் , பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பாரத தேசத்தின் பலத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில்,  முப்படையினர் மற்றும் ராணுவ தளவாடங்களின் மிரட்டலான அணிவகுப்பு அசத்தலாக நடந்தது…

பின்னர், இந்திய போர் விமானங்களின் வான் அணி வகுப்பும் நடைபெற்றது. இதில் புதிய ரக ஹெலிகாப்டர்கள்      ஏ.எச்.64 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும், சி.எச்.47 சினூக் ஹெலிகாப்டர்களும் வான் அணி வகுப்பில் இடம்பெற்றது. ஹெலிகாப்டர்களின் வான் அணிவகுப்பு பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

மாநிலங்களின்  பாரம்பரிய கலாசாரங்களை  பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள்  அசததலாக நடைபெற்றன… தமிழகம் சார்பாக ஐயனார்  சிலையுடன் வந்த அலங்கார வாகனம் கவனத்தை  கவனத்தை ஈர்த்தது..

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக டெல்லி ராஜபாதையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் ராணுவத்தினர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அணிவகுப்பு நடக்கும் சாலைகள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் முழுவதும், ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

Exit mobile version