தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் ஐந்தாம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள் 46 பேரைத் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்ந்தெடுத்தது. நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தார். இந்த விருதில் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ், பரிசுத் தொகை ஆகியன அடங்கும்.