முத்தலாக் தடை மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். திருமணமான முஸ்லீம் பெண்களை உடனடியாக மூன்று முறை ’தலாக்’ கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையினை கிரிமினல் குற்றமாக்க வழிசெய்யும் மசோதா, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே முத்தலாக் தடை மசோதா நிறைவேறியது.
ஏற்கனவே மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். மேலும், முத்தலாக் தடைச் சட்டம் அரசாணையாகவும் வெளியிடப்பட்டுள்ளதால் சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது.