இந்தியா, மிகப்பெரிய மற்றும் மிக துடிப்பான ஜனநாயக நாடாக திகழ்வதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.
நாட்டின் 75வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, நாட்டு மக்களிடையே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், காந்தியடிகளின் கூற்றின் படி, நாடு சரியான திசையில் நிலையான முன்னேற்றங்களை அடைந்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.
தலைமுறை தலைமுறையாய் போராடி சுதந்திரத்தை பெற்று தந்த போராளிகளை நினைவு கூர்ந்த குடியரசுத் தலைவர், பல சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள் நமக்கு இன்னும் தெரியாதவை உள்ளதாக குறிப்பிட்டார்.
அத்தகைய வீரர்களின் தியாகத்தை போற்றுவதாக கூறிய குடியரசுத் தலைவர், பாரம்பரியங்களின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் இந்தியாவின் அற்புதத்தை உலக நாடுகள் வியந்து பார்ப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.