ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் அதிபர் ராஜபக்ச சந்திப்பு

பலம் வாய்ந்த நாடுகளுக்கு கட்டுப்படும் தேவை இலங்கைக்கு இல்லை என, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் டொஷிமிட்சு மொடேகியை, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச சந்தித்து பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு மற்றும், நட்புறவு குறித்தான பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேலும், இலங்கையில் அமைதி நிலவ ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் டொஷிமிட்சு மொடேகி விருப்பம் தெரிவித்தார். இதனிடையே, இலங்கையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பொருளாதார வளர்ச்சி காணவும் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதாக தெரிவித்த கோத்தபய ராஜபக்ச, பலம் வாய்ந்த நாடுகளுக்கு கட்டுப்படும் தேவை இலங்கைக்கு இல்லை எனவும் கூறினார்.

Exit mobile version