கோடையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஏற்ற உணவுகள்

சுட்டெரிக்கும் கத்திரி வெயிலில் இருந்து கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து தகவல்களை பார்க்கலாம்…

கோடை காலத்தில் கடுமையான வெப்பத்தினால் கர்ப்பிணி தாய்மார்களும் குழந்தைகளும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் வெப்பத்தில் இருந்து எப்படி தற்காத்துகொள்வது என்பது குறித்து தமிழக அரசு சுகாதாரத்துறை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. ஓமலூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், உணவு முறைகள் குறித்து விளக்கப்பட்டது.

கோடை காலங்களில் அதிக வெப்பத்தினால் கர்ப்பிணிகளுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. நீர்ச்சத்து அதிகம் வெளியேறுவதால் உடல் சோர்வடைவது மட்டுமல்லாது கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கிறது. எனவே

கர்ப்பிணிகள் நீர்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தர்பூசணி,வெள்ளரிக்காய், முலாம்பழம் போன்ற நீர்சத்துமிக்க பழ வகைகளை எடுத்துக்கொள்ளலாம். கோடை காலத்தில் நாள்தோறும் ஏதாவது ஒரு வகை கீரையை உட்கொள்வது அவசியமாகும். பச்சை காய்கறிகள், தானியங்கள் தினமும் உணவில் இடம் பெற வேண்டும், நாள்தோறும் இரண்டு முதல் 3 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கோடை காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தாங்கள் அணியும் ஆடை விசயத்தில் கவனமாக இருக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பருத்தி ஆடைகளை அணிவதும் இறுக்கமான ஆடைகளை தவிர்ப்பதும் மிகவும் அவசியமான ஒன்றாகும். வீட்டில் உள்ள படுக்கை அறை ,ஹால் போன்ற பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் வெளிக்காற்று உள்ளே வரவும் வெப்ப காற்று வெளியே செல்லவும் வழிவகுக்க வேண்டும்.கோடை காலங்களில் குழந்தைகளை வெப்ப பக்கவாதம் தாக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே குழந்தையை தூக்கிக் கொண்டு வெயிலில் அலைவதைத் முற்றிலும் தவிர்க்க வேண்டும்

வரும் முன்னர் காப்பது அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும்.அதிலும் கோடைகாலத்தில் கர்ப்பிணி பெண்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியமாகும்.

Exit mobile version