கொடைக்கானலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இயற்கை பொருட்களை வைத்து விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தியா முழுவதும் செப்டம்பர் 2 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் அனைத்தும் இயற்கையாக கிடைக்கக்கூடிய கிழங்கு மாவு, தேங்காய் நார், கடலில் இருந்து கிடைக்கக்கூடிய கழிவு பொருட்களை வைத்து தயாரிக்கப்பட்டு வருவதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சிலைகளுக்கு அழகு சேர்க்கும் விதமாக இரசாயனம் இல்லாத இயற்கைக்கு தீங்கு ஏற்படாத வகையில் வண்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருகிறது. கொடைக்கானலில் முதன்முதலாக தயாரிக்கப்பட்டு வரும் விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.