கோவையில் சுரைக்குடுவைகளை பயன்படுத்தி கைவினை பொருட்கள் தயாரிக்கும் செயல்முறை பணிமனையில் பள்ளி மாணவ மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்
கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் சுரைக்குடுவைகளை பயன்படுத்தி கைவினை மற்றும் கலைப்பொருட்கள் தயாரிக்கும் செயல்முறை பயிற்சி நடைபெற்றது. இங்கு படிக்கும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களிடம் இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக பள்ளியைச்சுற்றி தோட்டங்கள் அமைத்து அதில் இயற்கைவழி காய்கறிகளை உற்பத்தி செய்து குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கிரிஷிகலா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தோடு இணைந்து சுரைக்குடுவைகளை பயன்படுத்தி பல்வேறுவிதமான கலைப்பொருட்களை தயாரித்தல் குறித்த பயிற்சியும் வழங்கப்பட்டது. இதனை பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்கள் சிறப்பாக செய்து சாதனை படைத்தனர்