உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வாக்குச்சாவடி அமைத்தல், வாக்காளர் பட்டியலை இறுதி செய்தல் உள்ளிட்ட பூர்வாங்க பணிகளை தொடங்க அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டம், ஒன்றியம், ஊராட்சி ,வார்டு வாரியாக பணிகளை தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி எண், வாக்குசாவடி பெயர், வாக்குச்சாவடி வகை குறித்த தகவல்களை அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2011 க்கு பிறகு தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல் நடைபெறவில்லை. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருந்ததே இதற்கு காரணமாகும். இந்த நிலையில் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராகியுள்ளது. இதைத்தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் பூர்வாங்க பணிகளை தொடங்கியுள்ளது.