கீழடியை தொடர்ந்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில், தொல்லிய துறையினர் முதற்கட்ட அகழாய்வுப் பணிகளை தொடங்கினர்.
தமிழ்நாடு முழுவதும் 7 மாவட்டங்களில் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அதன்பேரில் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் தொல்லியல் துறையினர் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், அகழாய்வுப் பணிகளுக்கான இடங்கள் டிரோன் கேமரா மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், மாளிகைமேட்டில் முதற்கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தொல்லியல் மேற்கொண்டு வருகிறது.
சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மாமன்னன் ராஜேந்திர சோழன் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் போன்ற வரலாற்று பொக்கிஷங்களை கண்டறியும் வகையில் அகழாய்வுப் பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது.