கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகைமேட்டில் முதற்கட்ட அகழ்வாராய்ச்சி

கீழடியை தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகைமேட்டில் முதற்கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தொல்லியல் துறை தொடங்கியது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், ராஜேந்திர சோழனின் தலைநகராக திகழ்ந்த கங்கை கொண்டசோழபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் அகழாய்வுக்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் ஜனவரி மாதம் தொடங்கியது.

ஆளில்லா சிறிய ரக விமானங்கள் மூலம், அகழாய்வுக்கான இடங்கள் படம் எடுக்கப்பட்டு மத்திய தொல்லியல் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மாளிகைமேடு பகுதியில் முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

4 தொல்லியல் அதிகாரிகள், 35 தொழிலாளர்களை கொண்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் கூரை ஓடுகள், பானை ஓடுகள், இரும்பினால் ஆன பொருட்கள், செம்பு காசுகள் ஆகியவை கிடைக்க பெற்றுள்ளன.

செப்டம்பர் மாதம் வரை இந்த ஆய்வு நடைபெற உள்ளது. அகழாய்வை சிறப்பாக நடத்தி, ராஜேந்திர சோழனின் புகழை உலகறிய செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version