தீவிரவாத தாக்குதலில் கணவனை இழந்த கர்ப்பிணிப் பெண்…

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சிவசந்திரன் வீரமரணம் அடைந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கர்ப்பிணியாக உள்ள சிவசந்திரன் மனைவி, தனது கணவர் கடைசியாக தொலைபேசி மூலம் பேசியதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.

“நான் பத்திரமாக இருக்கிறேன் நீ கவலைப்படாதே” என்று தன் கணவர் தன்னிடம் கூறியதே அவர் தன்னிடம் பேசிய கடைசி வார்த்தை என்று, அந்த பெண் கண்ணீர் மல்க கூறினார். மேலும், தங்களுக்கென யாருமில்லை என்று கர்ப்பிணிப் பெண் கூறியது ஒட்டுமொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version