“கொரோனா இரண்டாம் அலையில் அதிகம் பாதிக்கப்பட்டது இவர்கள் தான்!”

நாட்டில், கொரோனா தொற்று இரண்டாவது அலையில் கர்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இரண்டாம் கட்ட கொரோனா தொற்றில், இதுவரை 387 கர்ப்பிணி பெண்களுக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில், 111 கர்ப்பிணிகளுக்கு தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு கொரோனா காலகட்டத்தில் ஆயிரத்து 143 கர்ப்பிணி பெண்கள் தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், இவர்களில் 162 பெண்களுக்கு மட்டுமே தொற்று அறிகுறிகள் அதிகம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் அலையில் கர்ப்பிணி பெண்களின் இறப்பு சதவீதம் பூஜ்ஜியம் புள்ளி 7 சதவீதமாகவும், 2வது அலையில் 5 புள்ளி 7 சதவீதமாகவும் பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு தொற்று காலக்கட்டத்தில், இதுவரை ஆயிரத்து 530 கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டதாகவும், 30 பேர் உயிரிழந்ததாகவும் ஐ.சி.எம்.ஆர். கூறியுள்ளது.

Exit mobile version