பிரிட்டன் வேட்பாளர் தேர்தலில் வெற்றிபெற்ற லிஸ் டிரஸ்! பதவியை ராஜினாமா செய்த இந்திய வம்சாவளி அமைச்சர் பிரீத்தி படேல்!

priti patel

பிரிட்டன் பிரதமர் தேர்தலில் லிஸ் டிரஸ் வெற்றிபெற்றதையடுத்து பிரிட்டனின் உள்துறை அமைச்சர் பிரீத்தி படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பிரிட்டன் பிரதமர் வேட்பாளர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தோல்வி அடைந்த நிலையில், இந்திய வம்சாவளி வந்த பிரிட்டனின் உள்துறை அமைச்சர் பிரீத்தி படேல் பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் வேட்பாளர் தேர்வில் லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் பதவி விலகுவதாக பிரீத்தி படேல் அறிவித்துள்ளார்.

rishi sunak liz trous

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அவர் எழுதிய கடிதத்தில், அமைச்சர் பதவியில் இருந்து விலகி, கட்சியின் தொண்டர் என்ற முறையில் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக பிரீத்தி படேல் தெரிவித்துள்ளார். அவரது இந்த முடிவு பிரிட்டன் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version