ரிஷி சுனக்கைப் பின்னுக்குத் தள்ளிய லிஸ் ட்ரூஸ்! இங்கிலாந்தின் பிரதமராக தேர்வாகும் வாய்ப்பு பிரகாசம்!

rishi sunak liz trous

இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை (RISHI SUNAK) பின்னுக்குத் தள்ளி லிஸ் ட்ரூஸ் (LIZ TRUSS) பிரதமராக தேர்வாகிறார்.

நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் தனது கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ள நிலையில், தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. தற்போது பிரதமராக உள்ள போரிஸ் ஜான்ஸன் விரைவில் தனது ராஜினாமா கடிதத்தை ராணி இரண்டாம் எலிசபெத்திடம் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடுமையான நிதிச்சிக்கல் மற்றும் உயர்ந்து வரும் எரிபொருள் விலையால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் பிரதமராக லிஸ் ட்ரூஸ் பதவியேற்க உள்ளார்.

Exit mobile version