கும்பமேளாவில் ஏராளமான பக்தர்கள் மற்றும் அகோரிகள் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 15ம் தேதி மகர சங்கராந்தியையொட்டி, தொடங்கிய கும்மமேளா 50 நாட்கள் நடைபெறுகிறது. இதில் நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்ச கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
அந்தவகையில் பசந்த பஞ்சமியின் கடைசி நாளான இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் மற்றும் அகோரிகள் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நிராடி வருகின்றனர். விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.