திருப்பதியில் புரட்டாசி இறுதி சனிக்கிழமை : குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத இறுதி சனிக்கிழமையை முன்னிட்டு, சாமி தரிசனத்திற்காக திருப்பதி மலையில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.

திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்த மாதமான புரட்டாசி மாத இறுதி சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இலவச தரிசனத்திற்காக 4 கிலோ மீட்டர் தூரம் வரை சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் காத்திருந்ததாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்களின் வருகை அதிகரித்ததால், திருப்பதியில் தங்கும் அறைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. பக்தர்களின் வருகை அதிகரித்த நிலையில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான உணவு, குடிநீர், பால், மோர் ஆகியவைகளை தேவஸ்தான நிர்வாகம், தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் செய்து கொடுத்திருந்தது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு இயன்றவரை, தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து கொடுத்தனர்.

Exit mobile version