தல-க்கு வில்லனாக அவர் நடிக்கவில்லை: வலிமை படக்குழு

“வலிமை” படத்தில் அஜித்துக்கு எதிராக வில்லன் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடிக்கவில்லை என்று வதந்திகளுக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

வினோத் இயக்கிய “நேர்கொண்ட பார்வை படத்தில்” அஜித் நடித்திருந்தார். படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்த படத்தையும், அவருடன் இயக்கத்திலேயே நடிக்க அஜித் ஒப்பந்தம் ஆனார். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு “வலிமை” என்று பெயர் சூட்டப்பட்டது. இதனையடுத்து, படப்பிடிப்பு காட்சிகள் ஐதராபாத்தில் எடுக்கப்பட்ட நிலையில், படத்தில் நடிக்கும் சக நடிகர் மற்றும் நடிகைகள் தொடர்பான எந்த விவரத்தையும் படக்குழு வெளியிடவில்லை.

“மங்கத்தா” படத்திற்கு பிறகு, போலீஸ் அதிகாரியாக நடிகர் அஜித் குமார் “வலிமை” படத்தில் நடித்துள்ளார். மேலும், அவருக்கு மிகவும் பிடித்தமான பைக் மற்றும் கார் போட்டியில் பங்கேற்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பிரசன்னாவிடம், ரசிகர் ஒருவர் கேள்வி ஒன்றை கேட்டிருந்தார். “வலிமை” படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என்றதும், தகவலுக்காக காத்திருக்கிறேன் என்று பதிலளித்தார்.

பிரசன்னாவில் பதிலை கேட்டதும், “வலிமை” படத்தில் அவர் நடிப்பது உறுதி என பேசப்பட்டது. இந்த நிலையில், அஜித்துக்கு எதிராக வில்லன் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக தகவல் பரவிய நிலையில், படக்குழு மறுத்துள்ளது.

வலிமை திரைப்படம், தீபாவளி பண்டிகையின் போது திரையரங்குகளில் வெடிக்கும் என்று படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

Exit mobile version