நடிகர் அஜித் துப்பாக்கிச் சுடும் வீடியோ இணையத்தில் வைரல்

கோவையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், நடிகர் அஜித்குமார் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நடிப்பை தாண்டி, கார் பந்தயம், போட்டோகிராபி, ஆளில்லா விமானங்களை வடிவமைப்பது என பல துறைகளில் நடிகர் அஜித் அசத்தி வருகிறார். விஸ்வாசம் படத்திற்கு பிறகு துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் அவர் ஈடுபட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகின.

இந்த நிலையில், கோவையில் நடைபெறும் மாநில அளவிலான 45-வது துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொள்வதற்காக நடிகர் அஜித் பயிற்சியில் ஈடுபட்டது தற்போது தெரியவந்துள்ளது. கோவையில் நடைபெறும் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் கலந்து கொண்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

Exit mobile version