டுவிட்டரில் ”தல அஜித்தை” கொண்டாடும் ரசிகர்கள்…

கோவையில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டும் போட்டியில் அஜித் கலந்துக்கொண்டதாக டுவிட்டரில் ஹேஸ்டேக் மூலம் ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர். தமிழ் சினிமா வரலாற்றில் அஜித் என்ற பெயருக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு மோகம் இருக்கிறது என்பதை நேற்று நடந்த ட்விட்டரில் ரசிகர்களுக்கிடையே நடந்த சண்டையில் மீண்டும் ஒருமுறை நிரூபணமானது…

அடுத்த வாரம் அஜித்தின் “நேர்கொண்ட பார்வை” வெளியாகவுள்ள நிலையில் அது தொடர்பாக தினம் தினம் ஏதேனும் ஒரு ஹேஸ்டேக் ட்விட்டர் ட்ரெண்டாகி வருகிறது. இதற்கிடையில், இன்றைய தினம் ட்விட்டரில் #ThalaAJITHatRifleChampionship என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. தற்போது கோவையில் நடைபெற்ற துப்பாக்கி சூடும் போட்டியில் அஜித் கலந்துக்கொண்டதாக தகவல் வெளிவர, அதனை கொண்டாடும் விதமாக அதில் ரசிகர்கள் இத்தகைய ஹேஸ்டேக்கை ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர்.

நடிகர் அஜித் சினிமா துறை மட்டுமின்றி கார், பைக் ரேஸர், ஃபோட்டோகிராபி, மெக்கானிக் துறை போன்ற பல்வேறு துறைகளில் தனது அடையாளத்தை பதித்தவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். மேலும் கடந்தாண்டு அஜித் சென்னை கல்லூரி மாணவர்களுக்கு ஆலோசகராக இருந்து பறக்கும் ட்ரோன்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதில் அவரின் குழு சர்வதேச அளவில் இரண்டவது இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version