உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவின் லின் டானைத் வீழ்த்திய இந்தியாவின் பிரணாய்

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் 2 வது சுற்றில் இந்தியாவின் பிரணாய், சீனாவின் லின் டானைத் வீழ்த்தி 3 வது சுற்றுக்கு முன்னேறினார்.

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது சுற்றில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சீனாவின் லின் டானை இந்தியாவின் பிரணாய் எதிர்கொண்டார். ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்த இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதீக்கம் செலுத்தினார். 62 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் பிரணாய் 21 க்கு 11, 13 க்கு 21, 21 க்கு 7 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவின் லின் டானைத் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Exit mobile version