கோவா மாநில புதிய முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மரணமடைந்ததை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தது. தற்போதைய நிலவரப்படி பாஜகவுக்கு 12 எம்.எல்.ஏ க்களும் காங்கிரஸ் கட்சிக்கு 14 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இந்தநிலையில் தலைநகர் பனாஜியில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் புதிய முதலமைச்சராக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டதாக மாநில பாஜக தலைவர் வினோ டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். மனோகர் பாரிக்கர் அரசில் பிரமோத் சாவந்த் சபாநாயகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.