பிரமோத் சாவந்த் தலைமையிலான கோவா அரசு மீது சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
கோவாவின் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் கணைய புற்று நோய் காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சபாநாயகராக இருந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ பிரமோத் சாவந்த் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். 40 இடங்கள் கொண்ட கோவா சட்டப்பேரவையில் 4 இடங்கள் காலியாக உள்ளது. எனவே மொத்தம் உள்ள 36 இடங்களில் பெரும்பான்மைக்கு 19 இடங்கள் தேவை. பா.ஜ.க. கூட்டணிக்கு 21 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால், இன்று நடைபெறும் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், பிரமோத் சாவந்த் அரசு வெற்றி பெறும் என தெரிகிறது.