வரும் கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 10% இட ஒதுக்கீடு அமல் – மத்திய அமைச்சர்

வரும் கல்வியாண்டில் இருந்து அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மகோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அண்மையில் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், வரும் கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

Exit mobile version